News
*பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாநில எல்லையில் திருப்பி அனுப்பப்படும் கோழி வாகனங்கள்*
Published : Oct 08, 2026 09:35:28 PM - 3 weeks ago
*பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாநில எல்லையில் திருப்பி அனுப்பப்படும் கோழி வாகனங்கள்*
ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பறவை காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை மாநில எல்லை சோதனை சாவடியில் கால்நடைத்துறையினரின் 24 நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆந்திராவில் இருந்து கோழி மற்றும் முட்டை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
