News
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது
Published : Oct 08, 2026 09:28:26 PM - 3 weeks ago
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
200 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்
300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், 64 சிசிடிவி கேமரா மூலம் காண்காணிப்பு நடைபெறுகிறது. 241 மாற்றுத்திறனாளி, 960 முதியோர்,
178 காவலர்கள், 27 ராணுவம் என 1406 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. 320 வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 214 வாக்குகள் பதிவாகி உள்ளது.
80.25 சதவீதம். கடந்த சட்டமன்ற தேர்தலில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 593 வாக்குகள் பதிவாகி இருந்தது. 18379 வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.
கடந்த முறை அதிமுக வெற்றி பெற்றது 16,000 வாக்குகள் வித்தியாசம் என்ற நிலையில் கடந்த முறையை விட தற்பொழுது வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. 14 மேஜைகளில் 23 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது
