News
பழனியில் ரூ.100 கோடி நில மோசடி பத்திரப்பதிவு வழக்கு: மேலும் 2 பேர் கைது
Published : Oct 07, 2026 10:52:18 AM - 3 weeks ago
பழனியில் ரூ.100 கோடி நில மோசடி பத்திரப்பதிவு வழக்கு: மேலும் 2 பேர் கைது
பழனியில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி பத்திரப்பதிவு வழக்கில், சிபிசிஐடி போலீசார் மேலும் பெண் உட்பட 2 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பழனி சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர் சிவசங்கரி மற்றும் இடைத்தரகர் ஜெயபிரகாசுக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
