தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்
Published : Sep 30, 2026 10:42:47 AM - 4 weeks ago
தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்
அவரது மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் பெறும் மூன்றாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்
