ஆசிய விளையாட்டுப் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் அவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
Published : Sep 30, 2026 10:37:08 AM - 4 weeks ago
ஆசிய விளையாட்டுப் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் அவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
ஜப்பான் நாட்டில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்
இத்தடகள வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், குழு ஒருங்கிணைப்பும் வெற்றியை நோக்கி பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும்.
எதிர்காலத்திலும் இத்தடகள வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!. என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்
