பூந்தமல்லி - வடபழனி மெட்ரோபல மாதங்களாக பயணிகள் பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது
Published : Sep 25, 2026 01:47:58 PM - a month ago
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பாதுகாப்பு அனுமதி கிடைத்தும், திறப்பு விழாவுக்கு பிரதமரின் அலுவலகத்திலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தேதி வராததால் பல மாதங்களாக பயணிகள் பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில் உள்ள முதல் வழித்தடம் சென்னை மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இது பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ வழித்தடமாக பயணிகளின் சேவைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 உயர்மட்ட நிலையங்கள் உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடமிருந்து வணிக ரீதியிலான செயற்பாட்டிற்கு நிபந்தனையுடன் கூடிய தற்காலிக அனுமதி கிடைத்தது. அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விதித்த நிபந்தனைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிறைவேற்றியது. பின், மே மாதத்தில், சில தளர்வுகளுடன் இறுதி அனுமதியும் கிடைத்தது. பூந்தமல்லி - வடபழனி மெட்ரோபல மாதங்களாக பயணிகள் பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது
