News
*த.வெ.க வேட்பாளர் வெற்றி பெறக் கூடாது: மதுராந்தகத்தில் சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பரப்புரை*
Published : Sep 23, 2026 07:23:18 PM - a month ago
*த.வெ.க வேட்பாளர் வெற்றி பெறக் கூடாது: மதுராந்தகத்தில் சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பரப்புரை*
மதுராந்தகம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், "மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) வேட்பாளர் எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக் கூடாது" என்று உரையாற்றினார். மேலும் அவர் பேசுகையில், "ஒருவேளை தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால், அவர் தனது சொந்த ஆதாயத்திற்காக மீண்டும் ராஜினாமா செய்துவிடுவார்" என்று கடுமையாக விமர்சித்துப் பிரசாரம் செய்தார்.
