News
பொன்னேரி. ஆரணி ஆறு உயர்மட்ட மேம்பாலம் சீரமைக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை
Published : Sep 23, 2026 10:33:53 AM - a month ago
பொன்னேரி நகரப் பகுதிக்கும் குன்னம்மஞ்சேரி இடையே ஆரணி ஆறு உள்ளது. முன்னதாக மழைக்காலங்களில் ஏலியம்பேடு, புதுவாயல், இந்திரா நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கல்வி சுகாதாரம் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக பொன்னேரி நகரத்துக்கு படகு மூலம் ஆற்றை கடந்து சென்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு ஆரணி ஆற்றின் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.12 கோடியை 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, 200 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும், இருபக்கமும் 300 மீட்டர் இணைப்பு சாலையும் உருவாக்கப்பட்டு 2020ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், மேம்பாலம் கட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், மேம்பாலத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் சொட்டுகிறது. எனவே, பருவ மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
