News
வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
Published : Sep 21, 2026 10:52:18 AM - a month ago
*வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி*
வடக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளாக வலுப்பெற்றுள்ளன. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
