News
“முதலீடுகளை கொண்டுவந்ததாக கூறுவது பொய்” - முதல்வர் விஜய்யை விமர்சித்த நயினார் நாகேந்திரன்
Published : Sep 16, 2026 12:25:12 PM - 2 months ago
“முதலீடுகளை கொண்டுவந்ததாக கூறுவது பொய்” - முதல்வர் விஜய்யை விமர்சித்த நயினார் நாகேந்திரன்
தமிழக முதல்வர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்த்ததாகக் கூறப்படுவது பொய் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கம் உள்ளிட்டவற்றையே புதிய தொழில் முதலீடுகளாக சுட்டிக்காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பயணமாக பார்க்க முடியாது என்றும், அதை ஒரு சுற்றுப்பயணமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
