News
“மின்வெட்டு, மீனவர்கள் போராட்டம் என எதையும் கண்டுகொள்ளவில்லை” - தவெக அரசை சாடிய ஸ்டாலின்
Published : Sep 16, 2026 12:22:02 PM - a month ago
“மின்வெட்டு, மீனவர்கள் போராட்டம் என எதையும் கண்டுகொள்ளவில்லை” - தவெக அரசை சாடிய ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “மின்வெட்டு, மீனவர்கள் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாடு, கொலைக் குற்றங்கள் என மாநிலத்தை உலுக்கி வரும் எந்தப் பிரச்சினையையும் தவெக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் முதல்வர் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
