News
ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு
Published : Sep 14, 2026 12:44:22 PM - 15 hours ago
: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சை கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே திமுக ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், திட்டமிட்டப்படி திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது.
துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, முன்னாள் எம்எல்ஏ மயிலை த.வேலு, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சைதாப்பேட்டை போலீசார் உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது என 2 பிரிவுகளில் ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
