News
தனது உடல்நலம் நன்றாக இருப்பதாக மாயாவதி கூறி உள்ளார்
Published : Sep 14, 2026 12:18:33 PM - 16 hours ago
*மாயாவதி மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் அவர் பொதுவௌியில் தோன்றாமல், சமூக வலைதளங்களில் மட்டுமே கட்சி தொடர்பான செய்திகளை மாயவாதி கூறி வருகிறார் என தகவல்கள் பரவின.*
இந்நிலையில் தனது உடல்நலம் நன்றாக இருப்பதாக மாயாவதி கூறி உள்ளார். இதுகுறித்து லக்னோவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, “ கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கடந்த சில நாள்களாக பெஹன் ஜி(மாயாவதி) மிகவும் உடல்நலக்குறைவாக உள்ளார். அதனாலேயே முக்கியமான விஷயங்களை கூட எக்ஸ் பதிவுகள் மூலமாகவே தெரிவிக்கிறார் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வதாக தெரிகிறது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே பத்திரிகயைாளர்களை நேரில் சந்திக்கிறேன்’’ என்றார்.
