News
மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமாரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் சத்தியபாமா போட்டியிடுவார்கள் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
Published : Sep 10, 2026 03:52:10 PM - 5 days ago
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது.
இது குறித்து தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தவெக வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) - மரகதம் குமாரவேல், தவெக துணைப் பொதுச் செயலாளர், தாராபுரம் (தனி) - சத்தியபாமா, திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தவெகவினர் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுத்தர வேண்டுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
