பட்டினப்பாக்கம் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
Published : Sep 09, 2026 07:29:39 PM - 6 days ago
புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட உள்ளது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பை தொடர்ந்து, தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணை தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என அதிமுக, பாமக, மீனவ சங்கங்கள் மற்றும் அப்பகுதிவாழ் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளாமல் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைப்பதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலக கட்டடம் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 3 தனித்தனி குழுக்கள் அமைக்க உள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
