இடைத்தேர்தல் மதுராந்தகம், தாராபுரம் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
Published : Sep 09, 2026 02:34:45 PM - 6 days ago
இடைத்தேர்தல் மதுராந்தகம், தாராபுரம் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது. இதன்படி மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் திமுக சார்பில் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
வரலாற்று இடங்களை பார்வையிடுக
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு; "வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திரு. ஐ.பரந்தாமன், பி.ஏ., பி.எல்., (தி.மு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்) அவர்களும்; தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திருமதி. எஸ். சுகன்யா, எம்.ஏ., பி.எல்., அவர்களும் கழக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது
