News
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் மலர்தூவி மரியாதை
Published : Jun 03, 2026 12:26:53 PM - 2 months ago
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில், இன்று (03.06.2026) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு. அ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
