வெளிநடப்பு செய்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
Published : Sep 07, 2026 09:30:28 PM - 7 days ago
முதல்வரின் பதிலுரையை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச அனுமதிக்காத சபாநாயகரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து வெளிநடப்பு செய்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் காவல் மற்றும் தீயணைப்பு மானிய கோரிக்கையில் முதலமைச்சர் விஜய் அவர்கள் விவத்திற்கான பதிலளிக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு கொள்கை விளக்க குறிப்பில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய விஷயங்கள் ஆகியவற்றை விளக்கமாக கூறுவதுதான் பதிலுரை என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் விஜய் அவர்களுடைய பதிலுரை அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வகையில் அவருடைய பதிலுரை இருந்தது. நான் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன், செல்வி ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்த போதும் அதேபோல தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலைமைச்சராக இருந்தபோதும் அவர்களும் காவல் துறைக்கு பொறுப்பாக சட்டமன்றத்தில் பதிலுரை ஆற்றியிருக்கிறார்கள் அப்பொழுதெல்லாம் அவர்கள் ஒரு வரம்பிற்குள் நின்று எதிர்கட்சிகளை விமசரிப்பார்கள். ஆனால் வரம்பை தண்டி இன்று தமிழ்நாடு முதலமைச்சருடைய பதிலுரை அமைத்துள்ளது.
