முதலமைச்சரின் கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சோஷியல் மீடியாக்களில் சமூக பெண்கள் குறித்து மிகவும் கொச்சையாகவும் தவறாகவும் பதிவு செய்யும் தவெக-வினரை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும்
Published : Sep 07, 2026 04:42:25 PM - 7 days ago
முதலமைச்சரின் கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சோஷியல் மீடியாக்களில் சமூக பெண்கள் குறித்து மிகவும் கொச்சையாகவும் தவறாகவும் பதிவு செய்யும் தவெக-வினரை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சோஷியல் மீடியாக்களில் சமூக பெண்கள் குறித்து மிகவும் கொச்சையாகவும் தவறாகவும் பதிவு செய்யும் தவெக-வினரை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களை தரக்குறைவாகவோ, அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையிலோ விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்த நிலையில், பெண்கள் குறித்து தவறாகப் பேசக் கூடாது என்ற முதலமைச்சரின் கருத்தை வரவேற்பதாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதேவேளையில், சமூக வலைதளங்களில் பெண் தலைவர்கள் குறித்து ஆபாசமாகப் பேசுவதில் தவெக உறுப்பினர்களும் இருப்பதாகவும், அவர்களை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தி, ஆபாசமான முறையில் விமர்சிப்பதில் தவெக-வைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று குற்றம் சாட்டினார்.
