News
தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை
Published : Sep 04, 2026 02:05:57 PM - 2 weeks ago
தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை... 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 15 நாட்களாகப் போராடி வருகின்றனர். முன் எதிர்க் கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைத் தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சந்தித்துப் பேசிய இன்றைய முதல்-அமைச்சர் இப்போது அவர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? என்று உதய நீதி கேள்வி எழுப்பியுள்ளார் இந்நிலையில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
சென்னையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல், ராஜ்மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், முதலமைச்சர் தங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
.
