தமிழக சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம் பேரவைத் தலைவர் நாற்காலியில் முதல்முறை ஒரு பெண் தவெக எம்.எல்.ஏ சத்யபாமா விற்கு தங்கம் தென்னரசு பாராட்டு
Published : Sep 02, 2026 02:25:24 PM - 2 weeks ago
தமிழக சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம் பேரவைத் தலைவர் நாற்காலியில் முதல்முறை ஒரு பெண் தவெக எம்.எல்.ஏ சத்யபாமா விற்கு தங்கம் தென்னரசு பாராட்டு தமிழக சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம் அரங்கேறியது. அதாவது பேரவைத் தலைவர் நாற்காலியில் முதல்முறை ஒரு பெண் அமர்ந்தார் அவர் திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ சத்யபாமா என்பது கவனிக்கத்தக்கது.
சத்யபாமாவிற்கு தங்கம் தென்னரசு பாராட்டு
இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூட்டத்தொடரில் பேசும் போது மாண்புமிகு பேரவை மாற்று தலைவர் அவர்களே லேடி வெல்லிங்டன் அவர்கள் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவைத் தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கும் எதிர்பார்ப்பு இன்றைக்கு மாற்றுத் தலைவராக நீங்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது உள்ளபடியே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம் எங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம் என்றார்
