News
மக்கள் இசைவைப் பெற்று புதிய விமான நிலையத்துக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும்: திருமாவளவன்
Published : Aug 25, 2026 08:26:28 PM - 3 weeks ago
மக்கள் இசைவைப் பெற்று புதிய விமான நிலையத்துக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும்: திருமாவளவன்! விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய பரப்பளவில் புதிய விமான நிலையம் தேவைப்படுவதால், அதற்கான இடத்தை விரைந்து தேர்வு செய்ய வேண்டும். எந்தத் திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் கருத்துகளை அறிந்து, அவர்களின் இசைவைப் பெற வேண்டும் என்றார். மேலும், அரசு பொறுப்பேற்று 100 நாட்களே ஆன நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேள்வி எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்
