News
வீ தி லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை புதிய அம்சங்களை ஆராய்ந்து, பயன் பெறுங்கள். மாறுவோம், மாற்றுவோம்
Published : Aug 23, 2026 11:12:22 AM - 3 weeks ago
வீ தி லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை புதிய அம்சங்களை ஆராய்ந்து, பயன் பெறுங்கள். மாறுவோம், மாற்றுவோம் - வீ தி லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை, அவருடைய இயக்கத்தின் இணையதளம் குறித்த புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டார். தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, கடந்த ஜூன் 5ம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். முதலில் இயக்கமாகத் தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும்.
வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்தார். இந்த இயக்கத்தில் சேருவதற்கான பிரத்யேக இணையதளத்தையும் அவர் அறிமுகம் செய்தார். இதை தொடர்ந்து, முதல் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர். தற்போது வரை 19.57 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.இந்த நிலையில் இயக்கத்தின் இணையதளம் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. எங்களுடைய இணையதளம் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் உள்ள புதிய அம்சங்களை ஆராய்ந்து, பயன் பெறுங்கள். மாறுவோம், மாற்றுவோம். இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.
