உயர்தரமான சன்ன ரக அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
Published : Aug 20, 2026 06:56:40 PM - 4 weeks ago
உயர்தரமான சன்ன ரக அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
கே.என்.நேருவுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஆனா சாப்பிடுவது ரேஷன் அரிசியா ஆதவ் அர்ஜூனா கேள்வி
சட்டமன்றத்தில் நடைபெற்ற ரேஷன் அரிசி தர சர்ச்சையின்போது, பொதுமக்கள் நேரடியாகச் சமைத்து உண்ணக்கூடிய உயர்தரமான சன்ன ரக அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்தின் போது, ரேஷன் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் எழுந்தது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மோட்டா அரிசியையே சாப்பிடுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என்.நேருவுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்கும் நிலையில் அவர் ஏழையைப் போல ரேஷன் அரிசி சாப்பிடுவதாகக் கூறுவது வியப்பளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ரேஷன் அரிசியை நேரடியாகச் சமைத்து உண்பதில்லை என்றும், 90 சதவீதப் பொதுமக்கள் ரேஷன் அரிசியை இட்லி மாவு தயாரிக்க மட்டுமே பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார் சட்டமன்ற உறுப்பினர்களோ அமைச்சர்களோ அரசு மருத்துவமனைகளையோ அல்லது இலவசக் கல்விமுறையையோ கூடப் பயன்படுத்துவதில்லை என்றும் உடநலம் குன்றினால் வெளிநாடுகளுக்குச் சிகிச்சை பெறச் செல்வதாகவும் சாடினார் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசுச் சேவைகளை அனைவரும் பயன்படுத்தும் சூழல் உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
