தமிழக மீனவர் சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏன்.? - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,
Published : Aug 20, 2026 10:54:26 AM - 4 weeks ago
தமிழக மீனவர் சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏன்.? - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,
ஈரானிய கடற்கொள்ளையர்களால் தமிழ மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டு, 5 நாட்களுக்கு பின் இன்று பேரவையில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது,
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் சவுதி அரேபியாவில், ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இது தொடர்பாக தாங்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என அதிமுக நேற்று வெளிநடப்பு செய்த நிலையில், இன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்சனை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வருவது வழக்கம், உயிரிழந்த மீனவர் மாவீரன் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அவசரம் அவசியம் கருதி எழுப்பும் பிரச்சனையை 15 நாள் கழித்து விவாதத்துக்கு எடுத்தால் எப்படி என திமுக கொறடா எ.வ.வேலு சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
சிறப்பு கவனமாக அவசர பிரச்னைகளை எடுத்து கொள்ள வேண்டும் எனவும் எ.வ.வேலு வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் பதில் அளிக்க அமைச்சர் தயாராக இருப்பது அவசியம்; அதற்குப் பிறகே கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்றார
உயிரிழந்த மீனவர் மாவீரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் கேட்டு கொண்டார். மீனவர் சுட்டு கொள்ளப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கடற்கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்த மீனவர் மாவீரன் உடலை தமிழ்நாடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். சவுதி அரேபியாவில் இந்த சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருவதால் கொல்லப்பட்ட மீனவர் மாவீரன் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்
