தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 500 இளம் கலைஞர்களுக்கு நிதியுதவி,கல்வி நிறுவன வளாகங்களில்,பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள்-தமிழக அரசு
Published : Aug 19, 2026 06:31:56 PM - 4 weeks ago
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 500 இளம் கலைஞர்களுக்கு நிதியுதவி,கல்வி நிறுவன வளாகங்களில்,பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள்-தமிழக அரசு
ரூ.1.50 கோடியில்
500 இளம் கலைஞர்களுக்கு நிதியுதவி
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் / ஆடை, அணிகலன்கள் வாங்குவதற்கு ஆண்டுதோறும் 500 கலைஞர்களுக்கு ரூ.10,000/- லிருந்து ரூ.20,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம் மேலும் 500 இளம் கலைஞர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
ரூ.1.50 கோடியில்
கல்வி நிறுவன வளாகங்களில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள்
இத்துறையின் இணையதளம் மூலம், இசைப்பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை, கட்டணங்கள் செலுத்துதல், விருதுகளுக்கு கலைஞர்கள் விண்ணப்பித்தல், கலை நிகழ்ச்சிகள் நடத்திட நிதியுதவி கோருதல், நலிந்த கலைஞர் நிதி உதவி திட்டத்திற்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளை இணைய வழியில் கொண்டுவரும் வகையில் இணையதளம் மேம்படுத்தப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூ.25 இலட்சம் ஒதுக்கீடு.
