தமிழ்நாடு சுற்றுலா தங்கும் விடுதிகள் மறுகட்டமைப்பு , இயந்திரப் படகுகளும் மின் படகுகளாக மாற்றம்,இ-சார்ஜிங் நிலையங்கள்-தமிழக அரசு
Published : Aug 19, 2026 06:14:03 PM - 4 weeks ago
தமிழ்நாடு சுற்றுலா தங்கும் விடுதிகள் மறுகட்டமைப்பு , இயந்திரப் படகுகளும் மின் படகுகளாக மாற்றம்,இ-சார்ஜிங் நிலையங்கள்-தமிழக அரசு
ரூ.33.80கோடியில்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதிகள் மறுகட்டமைப்பு
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இராமநாதபுரம் - மண்டபத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதி பொது-தனியார் பங்களிப்புடன் ரூ. 30 கோடி திட்ட மதிப்பீட்டிலும்,
தென்காசி - குற்றாலத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள் ரூ. 3.80 கோடி திட்ட மதிப்பீட்டில் மறுகட்டமைக்கப்படும்.
.
ரூ.17.82 கோடியில்
இயந்திரப் படகுகள் மின்படகுகளாக மாற்றி அமைக்கப்படும்
பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இயக்கப்படும் படகு இல்லங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து இயந்திரப் படகுகளும் மின் படகுகளாக மாற்றி அமைக்கப்படும்.
ரூ. 5 கோடியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகள் மற்றும் படகு இல்லங்களில் இ-சார்ஜிங் நிலையங்கள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகள் அமைந்துள்ள மாமல்லபுரம், இராமேஸ்வரம், திருச்செந்தூர், கிருஷ்ணகிரி, ஏற்காடு, மதுரை ஆகிய இடங்களிலும் மற்றும் உதகமண்டலம், பைக்காரா ஆகிய படகு இல்லங்களிலும் இ-சார்ஜிங் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்
