மத்திய அமைச்சரவையில் 6 முதல் 8 புதிய முகங்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்
Published : Aug 19, 2026 12:47:27 PM - 4 weeks ago
மத்திய அமைச்சரவையில் 6 முதல் 8 புதிய முகங்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஆக.20-ஆம் தேதிக்குப் பிறகு பெரிய அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் 6 முதல் 8 புதிய முகங்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: தற்போது அமித் ஷா, அஸ்வினி வைஷ்ணவ், பிரல்ஹாத் ஜோஷி, மனோகர் லால், ஜோதிராதித்ய சிந்தியா, மன்சுக் மாண்டவியா ஆகிய 6 மூத்த அமைச்சர்கள் இரண்டுக்கும் அதிகமான துறைகளைக் கவனித்து வருகின்றனர்.
இவர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் நோக்குடனும், அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களைக் கருத்தில் கொண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
