அரசுப் பெண் பணியாளர்களின் 3வது குழந்தைக்கு வழங்கப்பட்டு வந்த 12 வார மகப்பேறு விடுப்பை ஓராண்டாக உயர்த்தி அறிவித்துள்ளார்
Published : Aug 18, 2026 06:13:16 PM - 4 weeks ago
அரசுப் பெண் பணியாளர்களின் 3வது குழந்தைக்கு வழங்கப்பட்டு வந்த 12 வார மகப்பேறு விடுப்பை ஓராண்டாக உயர்த்தி அறிவித்துள்ளார்
சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சரத்குமார், அரசுப் பெண் பணியாளர்களின் 3வது குழந்தைக்கு வழங்கப்பட்டு வந்த 12 வார மகப்பேறு விடுப்பை ஓராண்டாக உயர்த்தி அறிவித்துள்ளார். இந்திய அரசமைப்பின் 42வது சட்டப்பிரிவு, பணியிடங்களில் நியாயமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான சூழலை உறுதி செய்வதோடு, பெண்களுக்குத் தேவையான மகப்பேறு நிவாரணம் வழங்குவதற்கும் அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் இந்த வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றுவதில், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மனிதவள மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பெண் அரசுப் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு குறித்த மிக முக்கியமான அறிவிப்பை அமைச்சர் சரத் வெளியிட்டார்.
