சென்னையில் ஒலிம்பிக் இல்லம் அமைக்கப்படும்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published : Aug 18, 2026 06:06:43 PM - 4 weeks ago
சென்னையில் ஒலிம்பிக் இல்லம் அமைக்கப்படும்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னையில் ஒலிம்பிக் இல்லம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். விளையாட்டுதான் எனது மதம், மொழி, குடும்பம் எல்லாமே. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் திருச்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாணவர்களில் நானும் ஒருவர். நேரு விளையாட்டரங்கில் படித்து விளையாடியவன் நான். இப்பேரவையில் மாரியவில்சன், திமுகவின் ஐ.பெரியசாமி மற்றும் நான் உட்பட மூன்று பேர் கூடைப்பந்து வீரர்கள்.
சட்டப்பேரவையில் அம்பேத்கரின் கனவு முதல்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக 8 தலித் சமூகத்தைச் சேர்ந்த தோழர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இந்த அவையில் அமர்ந்துள்ளனர். என்று கூறினார். தொடர்ந்து விளையாட்டுத்துறைக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
* சென்னையில் ஒலிம்பிக் இல்லம் அமைக்கப்படும்
10 ஒலிம்பிக் சிறப்பு விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்
* ஊராட்சிகளில் 500 விளையாட்டு மைதானங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்படும்
* விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்
* தமிழ்நாட்டில் விளையாட்டு சட்டம் கொண்டுவரப்படும்
* அனைத்து மாவட்டங்களிலும் புதிய விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும் என்றும் அனைத்து விடுதிகளிலும் ரூ.15 கோடியில் AC அமைக்கப்படும்
* 8 முதல் 18 வயதிற்குட்பட்ட வீரர்களை கண்டறிய ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் வகுக்கப்படும்
* தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, கோகோ, சிலம்பம், களரிபட்டு, மல்லர்கம்பம் போன்ற விளையாட்டுகளை உலக அளவில் கொண்டு செல்வதற்காக ஆண்டுதோறும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்
* சென்னை நேரு ஸ்டேடியத்தில் உயர்தர பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும்
* சென்னை பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கத்தில் புதிய விளையாட்டு பல்நோக்கு மையங்கள் அமைக்கப்படும்
* விளையாட்டு வீரர்களை கண்டறிய புதிய அமைப்பு உருவாக்க உள்ளோம். விளையாட்டு விடுதிகளை உலகத்தரத்திற்கு உயர்த்த வேண்டும் விளையாட்டிற்கான தனி கல்வி சூழல் இங்கு இல்லை
* எம்எல்ஏக்கள், அதிகாரிகள், நீதிபதிகளுக்கு விரைவில் விளையாட்டு போட்டிகளை நடத்த முதல்வர் கூறியுள்ளார்
* தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்காக தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்
* தேசிய விளையாட்டில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் விமான கட்டணத்தை அரசு ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
