"காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்றியது ஏன்? காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?-எ.வ.வேலு கேள்வி
Published : Aug 18, 2026 01:58:40 PM - 4 weeks ago
"காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்றியது ஏன்? காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?-எ.வ.வேலு கேள்வி
"காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்றியது ஏன்? காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன? புதிய திட்டங்களுக்கு காமராஜர் பெயரை வைக்கலாமே. நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு நீங்கள் பெயர் வைப்பது ஏன்?"
- சட்டப்பேரவையில் எ.வ.வேலு கேள்வி
பொருளாதாரத்தை முன்னேற்ற சாலைகள் தேவை; திமுக ஆட்சியில் 67,000 கி.மீ. தூரம் சாலைகள் அமைப்பு
அரசு ஒப்பந்த மதிப்பீடுகள் முக்கியமானது என்பதால் அதனை தயார் செய்ய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
- திமுக MLA எ.வ.வேலு
முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்; அவரை யாரும் வழிநடத்த தேவையில்லை, விரல் நுனியில் தகவல் வைத்துள்ளார்
ஆனால் நடப்பு ஆண்டில் எவ்வளவு சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, எவ்வளவு நிதி ஒதுக்கீடு என விவரம் இல்லை
ஒரு திட்டம் போடப்பட்டால் அதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு என கொள்கை குறிப்பில் சொல்ல வேண்டும்
வெள்ள தடுப்பு பணிகள் குறித்து கொள்கை விளக்க குறிப்பில் இல்லை
- திமுக MLA எ.வ.வேலு
"திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம்" - எ.வ.வேலு விமர்சனம்
"திட்டங்கள் மக்கள் வரி பணத்தில் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம். காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது" - அமைச்சர் ராஜ்மோகன்
