"அங்கு 57 பேர்தான் இருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் எழுந்தால் உங்களால் பேசவே முடியாது" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேரவையில்
Published : Aug 17, 2026 01:40:33 PM - 4 weeks ago
"அங்கு 57 பேர்தான் இருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் எழுந்தால் உங்களால் பேசவே முடியாது" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேரவையில்
சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்
பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு பேரவைத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து ஆதவ் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
கோவையில் மாணவன் அமுதன் கொலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்து அதன் மீது உரையாற்றினார்.
போதைப்பொருள் புழக்கம் குறித்து தகவல் கொடுத்த மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துப் பேசினார்
அப்போது திமுக மீது ஆதவ் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அவையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.
அப்போது ஆதவ் அர்ஜுனா, "அங்கு 57 பேர்தான் இருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் எழுந்தால் உங்களால் பேசவே முடியாது" என்று கூறினார்.
இதற்கு பேரவைத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கடைசி வரிகள் மட்டும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது" என்று கூறினார்.
பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக அமைச்சர் ஆதவ் கூறினார்.
இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து ஆதவ் பேசுகையில் 100 நாள்களில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க முடியாது. 2020க்கு முன் போதைப்பொருள் கலாசாரம் தமிழகத்தில் இல்லை. போதைப்பொருள் புழக்கத்தை உருவாக்கியதே திமுகதான் என்று கடுமையாக விமர்சித்தார்.
