கோவை மாணவர் கொலை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Published : Aug 17, 2026 12:26:18 PM - 4 weeks ago
கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் கொலைக்கு போதைப்பொருள் விவகாரம் காரணமல்ல என பேரவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். மாணவர் குழுக்கள் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று குறிப்பிட்டு, ஒரு நபரின் பெயரை சொல்லி அவர் மீது முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் குறிப்பிட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். தற்போதைய பிரச்சனையை திசை திருப்பும் வகையில் போதை பொருள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டு பேசிய பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரே ஐ.பி.எல் போட்டியின் போது பவுடர் போன்ற ஒன்றை நுணுக்கிவிட்டு மாத்திரை என்று கதை விட்டார் என பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து எழுந்து பேசிய சர்ச்சைக்கு உள்ளான அமைச்சர் சரத்குமார், ஐ.பி.எல் போட்டியின் போது என்ன நடந்தது என்பதை ஏற்கனவே விளக்கிவிட்டேன் என்று பேசினார்.
"மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். மயக்க நிலையில் இருந்த அமுதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமுதன் கொலை வழக்கு - போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை
கோவை மாணவர் கொலையில்யில் இதுவரை 15 பேர் கைது. இரு குழுக்கள் இடையேயான மோதலில் மாணவர் அமுதன் கொலை. போதைப் பொருள் தொடர்பான வழக்கு அல்ல.
உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ, அரசுக்கோ இல்லை. போதைப் பொருள் குறித்து புகார் அளித்ததால் கொலை என்பது தவறு. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை - CM விஜய் உத்தரவு. மாணவர் அமுதன் கொலை - 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை" - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
