புதுச்சேரி சுதந்திர தினவிழா முதல்வர் ரங்கசாமி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
Published : Aug 15, 2026 03:21:15 PM - 4 weeks ago
புதுச்சேரி இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பின்னர் முதல்வர் ரங்கசாமி உரையாற்றியதாவது: கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், மக்கள் விரும்பும் பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரியில் தனி நபர் வருமானம் ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரூ.112 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட முழுமையான தானியங்கி மற்றும் கணினி மயமாக்கப்பட்ட புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 நிதியுதவி 2026 ஜனவரி முதல் ரூ. 2500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 65 ஆயிரம் குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். இதில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசனை மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுச்சேவை நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ரூ.500 கோடியில் இப்பணி தொடங்கப்படும்
