News
11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடை: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
Published : Aug 15, 2026 01:21:39 PM - 4 weeks ago
11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடை: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
தமிழகத்தில் தனியார் நிறுவனத்தின் 11 மதுபான பிராண்டுகளுக்கு FSSAI ஆய்வின் அடிப்படையில் டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்து, 11 பிராண்டுகளின் ட்ரான்ஸ்பர், சேல்ஸ் -ஐ உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இயற்கை, செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிப்பு. மறுஉத்தரவு வரும் வரை கடைகளில் விற்பனை செய்ய கூடாது என உத்தரவிட்டுள்ளது
செயற்கை சுவையூட்டிகள் கலப்பு: 11 மதுபான பிராண்டுகளுக்கு தடை டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
அனுமதிக்கப்படாத இயற்கை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் கலக்கப்பட்டிருப்பது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஆய்வில் உறுதியானதைத் தொடர்ந்து, 'என்ரிகா எண்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் 11 பிரபல மதுபான வகைகளின் விற்பனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளது
தடை செய்யப்பட்ட மதுபான பிராண்டுகளின் விவரங்கள்:
1.வி.எஸ்.ஓ.பி எக்ஷா கோல்ட் பிராந்தி (VSOP EXSHAW GOLD BRANDY)
2.லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்.ஓ பிளண்டட் பிரீமியம் பிராந்தி (LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY)
3.மெக் டவல்ஸ் வி.எஸ்.ஓ.பி பிராந்தி (பிளண்டட் பிராந்தி) (Mc Dowells VSOP Brandy (Blended Brandy))
4.நம்பர் 1, மெக் டவல்ஸ் ஃபைன் பிராந்தி (இந்தியன் பிராந்தி) (NO.1 McDowells Fine Brandy (Indian Brandy))
5.மேன்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி (இந்தியன் பிராந்தி) (MENSCLUB Deluxe Brandy (Indian Brandy))
6.ஹனி பீ ஃபைன் பிராந்தி (இந்தியன் பிராந்தி) (HONEY BEE FINE Brandy (Indian Brandy))
7.என்ரிகா வி.எஸ்.ஓ.பி செலெக்ட் பிராந்தி (ENRICA VSOP SELECT BRANDY)
8.என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ பிராந்தி (ENRICA PLATINUM RESERVE XO BRANDY)
9.என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி (ENRICA PREMIUM FRENCH BRANDY)
10.வீரன் ஸ்பெஷல் பிராந்தி (VEERAN SPECIAL BRANDY)
11.என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் (ENRICA OLD INDIE CLASSIC DARK RUM) இந்த மதுபான பிராண்டுகளின் விற்பனைக்கு டாஸ்மாக் தடை விதித்துள்ளது.
என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்டின் மேற்கூறிய 11 வகை மதுபானங்களை குடோனிலிருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எஃப்.எல்2 மற்றும் எஃப்.எல்3 உரிமம் பெற்றவர்களுக்கு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
