மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு..
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை அலுவல்கள் பாதிக்கப்பட்டன. மாணவர்கள் மீது தடியடி, நீட் முறைகேடு, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டன. இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஒன்றிய அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியது. கூட்டத்தொடரின் கடைசி நாளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மக்களவைக்கு வந்தனர். கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
