News
சென்னையில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published : Jun 02, 2026 01:46:07 PM - 2 months ago
சென்னையில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
கத்திரி வெயில் காலம் முடிந்த பின்னரும் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், சென்னையில் இன்று (ஜூன் 2) வெயில் அளவு 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகிச் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தகிக்கும் சூரிய வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாகப் பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறும், போதிய அளவு நீர்ச்சத்துக்களை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
