எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பு தரவரிசை பட்டியலை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்
Published : Aug 10, 2026 06:06:54 PM - a month ago
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூன் 29 முதல் ஜூலை 27 வரை நடைபெற்றது. எம்பிபிஎஸ்-ல் மொத்த இடங்கள் 7,157ல் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்கள் 4,473 இடங்கள். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியலில் விழுப்புரத்தை சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார்.
புதுக்கோட்டை மாணவி ஸ்ரீநிகா 2ம் இடம் (700), விருதுநகர் மாணவர் சுடர் 3ம் இடம் (696) பிடித்துள்ளார். சென்னை மாணவி வனிஷா சதீஷ் 4ம் இடம்(695), ஈரோடு மாணவர் சபரி 5ம் இடம்(695) பிடித்துள்ளார். 7.5% இடஒதுக்கீடு பட்டியலில் 599 மதிப்பெண்கள் பெற்று நாகை மாணவர் எம்.தினேஷ் முதலிடம் பிடித்தார். சேலம் தரனீஷ் 595 மதிப்பெண்களுடன் 2ஆம் இடம், புதுக்கோட்டை ஆர்.ராஜேஷ் 595 மதிப்பெண்களுடன் 3ஆம் இடம் பிடித்தனர். என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; கலந்தாய்வுக்கு எவ்வித காலநீட்டிப்பும் தரப்படாது; தரவரிசைப் பட்டியலையும் மாற்ற இயலாது.
