News
இபிஎஸ் தலைமையில் இன்று வரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை; கே.பி.முனுசாமி சட்டமன்ற தேர்தலில் தோற்றதற்கு என்ன காரணம் -சி.வி.சண்முகம் கண்டனம்
Published : Aug 10, 2026 05:30:00 PM - a month ago
இபிஎஸ் தலைமையில் இன்று வரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை; கே.பி.முனுசாமி சட்டமன்ற தேர்தலில் தோற்றதற்கு என்ன காரணம் -சி.வி.சண்முகம் கண்டனம்
47 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் இபிஎஸ் செல்லாகாசு ஆகிவிட்டாரா? வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா
இபிஎஸ்-இன் சொந்த செல்வாக்கால்தான் அதிமுக வென்றதாகக் கூறிய அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சி.வி.சண்முகம் கண்டனம்
திருமாவளவனை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று நான் சொன்னதாக சொல்கிறார்கள். ஆமாம், சொன்னேன். எந்த சூழலில் சொன்னேன்? திமுக ஆதரவோடு ஆட்சி அமைக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் ஆனால், திருமா முதலமைச்சராக இருக்கட்டும் மற்ற அமைச்சர் பதவிகளை எல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று நிபந்தனை விதித்ததாகவும் சொன்னார்கள் அப்போது நான் திருமா முதலமைச்சராகட்டும் என்று சொன்னேன் திமுக ஆதரவோடு நீங்கள் ஆட்சி அமைப்பது தப்பில்லை திருமா முதலமைச்சர் ஆகட்டும் என்று சொன்னால் தப்பா சட்டமன்றத்துக்கு வெளியே சி.வி.சண்முகம் பேட்டி
