News
முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தார்
Published : Aug 08, 2026 09:24:20 AM - a month ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் (7.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கில், 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தார்.
மேலும், 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
