News
பா.ஜனதாவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் - கீ. வீரமணி
Published : Aug 08, 2026 09:13:05 AM - a month ago
நாடாளுமன்றத்தில் தொகுதி சீரமைப்பு மற்றும் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதாக்களை எதிர்க்கட்சிகள் உறுதியாக எதிர்க்க வேண்டும் ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும் உரிமையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான பிரச்சினை இது
தற்போது மீண்டும் அந்த முயற்சியை மத்திய பா.ஜனதா அரசு மேற்கொண்டு வருகிறது தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றும் ஆபத்து கொண்டது இந்த சூழ்ச்சியை எதிர்க்கட்சிகள் உணர்ந்து வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும், தொகுதி சீரமைப்பு மசோதாவையும் முடிச்சுப்போட்டு அரசியல் செய்யப் பார்க்கும் பா.ஜனதாவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என கீ. வீரமணி தெரிவித்தார்
