15 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் : குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு
Published : Aug 08, 2026 08:51:27 AM - a month ago
15 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் : குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 5 பேரை நிரந்தர நீதிபதிகளாகவும், 10 பேரை கூடுதல் நீதிபதிகளாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 15 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த பரிந்துரையை ஏற்று,முதல்கட்டமாக வழக்கறிஞர்களான கே.கோவிந்தராஜன், ரஜினீஷ் பதியால், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகிய 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, வழக்கறிஞர்களான எஸ்.ரவீக்குமார், என்.திலீப்குமார், இ.மனோகரன் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன், சி.திருமகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அல்லி ஆகிய 10 பேரையும் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த 15 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
