News
கர்நாடகாவை போல் அனைத்துக்கட்சி கூட்டம் , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி
Published : Aug 07, 2026 01:24:52 PM - a month ago
குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பேரவையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி; மேகதாது விவகாரத்தில் புதிய காவிரி நடுவர் மன்றம் அமைப்பதை அதிமுக ஏற்கவில்லை. கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கான நீர் திறக்கவில்லை; அணை நிரம்பியதால் உபரிநீர் தான் வருகிறது. குறுவை சாகுபடி இன்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தேவை
கர்நாடகாவில் கூட்டியது போல் தமிழ்நாட்டிலும் அனைத்து கட்சிக்கூட்டத்தை கூட்ட வேண்டும். அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்ட விவசாய பிரதிநிதிகளுடனும் அரசு ஆலோசனை நடத்தியது. கர்நாடகாவில் கூட்டியதுபோல் தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி என்பது உணர்வுபூர்வமான பிரச்சனை என்பதால், விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு, சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து உரிய முடிவை எடுப்பதே கடந்த கால வரலாறு. குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.
