News
தலைமைச்செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
Published : Aug 07, 2026 12:45:56 PM - a month ago
சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தவெக வாக்குறுதி என்ன ஆனது என்று விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். முழுமையான விவசாய கடன் தள்ளுபடியை உடனே அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
“கத்தி படத்துல விவசாயத்தை பத்தி நிறையா பேசுனாரு.. ஆனா முதலமைச்சராக எங்களுக்கு இதுவுமே செய்யல” என்றும் தெரிவித்தனர். சட்டப்பேரவைக்கு உள்ளே விவசாயிகள் பிரச்சனை செய்தி குறித்து விவாதம் நடந்துவரும் நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே தவெக அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட விவசாயிகளை தவெக அரசு கைது செய்தது.
