News
நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி: நெல் ஜெயராமன் வரவேற்பு.
Published : Aug 06, 2026 05:45:32 PM - a month ago
நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி: நெல் ஜெயராமன் வரவேற்பு. நம்மாழ்வார் பெயரில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படுமென, வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளமைக்கு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் வரவேற்பு தெரிவித்துள்ளது.தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலும், நம்மாழ்வாரின் புகழைப் போற்றும் வகையிலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு உள்ளது. மறைந்த நெல் ஜெயராமன் வழியில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் நமது முயற்சிக்கு, அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்துள்ளது. மண்வளம் காக்கவும், நஞ்சில்லா உணவு உற்பத்தியை பெருக்கவும் தொடர்ந்து பாடுபட்டு வரும் தமிழக அரசுக்கும், இந்த உன்னத முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக” செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
