தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்
Published : Aug 05, 2026 12:34:59 PM - a month ago
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்
1 ரூ.11,532 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு வழங்கப்படும் என கூறினார்
2 அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டதிற்கு ரூ. 838 கோடி நிதி ஒதுக்கீடு
அடிப்படை காப்பீடு ரூ. 5 இலட்சத்தில் இருந்து ரூ.7.5 இலட்சமாக உயர்ந்துள்ளது. ரூ.12 லட்சம் வரை குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு வழங்கப்படவுள்ளது. அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதி உதவி செய்யப்படுகிறது. 2,992 சிகிச்சைகள் & 1,535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் இணைக்கப்படவுள்ளன
3
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு ரூ.14,830 கோடி ஒதுக்கீடு
4
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்
ரூ.40 கோடி நிதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 2,500 ஹெக்டேரில் புதிய அலையாத்திக் காடுகள் உருவாக்கவும் கடற்கரை பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்பு குறித்தும் , பல்லுயிர் பெருக்கம், மீன்வளம் மற்றும் கடலோர வாழ்வாதார மேம்பாடுடவும் சேதமடைந்த அலையாத்திக் காடுகள் மீட்டெடுக்கப்படும் என கூறினார்.
5 வளர்ச்சி, ஊராட்சித் துறைக்கு ரூ.39,609 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது
6 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை மேம்படுத்த ரூ.354 கோடி ஒதுக்கீடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, பெண்கள் தலைமையிலான காவல் பணிகள், அவசரகால நடவடிக்கை மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளது
7 சென்னை நகரில் 20 இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் அமைக்கப்படும். சென்னையில் நடைபாதைகள், தெருக்கள், நகர்ப்புற போக்குவரத்து மறுசீரமைக்கப்படும்
8 தமிழக பட்ஜெட்டில் ரூ.3,500 கோடியில் வெற்றி வீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்
9 தலைநகர் சென்னையில் மின்பகிர்மான திறன் ரூ.1,390 கோடியில் வலுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்படும். மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில், வணிக நுகர்வோருக்கு ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்படும். ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம் நிறுவப்படும். சென்னையை உலக் தரத்திற்கு உய்த்தும் ஆய்வு பணிகளுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன்.
நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.8,252 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் 20 ஸ்மார்ட் பார்க்கிங் அமைக்கப்படும். முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,117 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறைந்த குடும்ப வருமானம் மற்றும் இளைஞர்களுக்கு தரமான வீடுகள் கட்டி தரப்படும்.
சென்னையில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், பொது இடங்கள் பசுமையாக்கப்படும். சென்னையில் 5 ஆண்டுகளில் சமமான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். மேலும் கூவம், அடையாறு ஆறுகளை தூய்மைப்படுத்தி மேம்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து இந்த 2 ஆறுகளிலும் படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார் நிதி அமைச்சர். மேலும் திட்டங்களுக்கு AI மூலம் விரைவாக அனுமதி தர ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும், இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது,
10 காவிரி -வைகை - குண்டாறு நதி இணைப்புத் திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நதி இணைப்புத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது
11 2,117 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நகர்ப்புர வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். குடிநீர், சாலைகள், கழிவுநீர், போக் குவரத்து, பசுமை & மின் ஆளுமை ஒரே திட்டத்தின் கீழ் வரும் மற்றும் 2031-க்குள் உலகத் தர நகரங்களை உருவாக்கும் இலக்கு துவங்கப்படும் என கூறினார்.
12 , போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,561 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு1,000 புதிய AC மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும். AC மின்சாரப்பேருந்துகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
13
மை ஹோம் திட்டத்தின் கீழ் அடுத்த 7 ஆண்டுகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். 24,131 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இவ்வாண்டில் நிறைவு பெறவுள்ளது. 14,194 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுடன் தரமான குடியிருப்புகள் வழங்கப்படும்
14
பட்ஜெட்டில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்: ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்.பால் உற்பத்தி அதிகரிப்பு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்
15
மீனவர் நலன் உதவித் தொகை ரூ.6,000இல் இருந்து ரூ. 7,000ஆக உயரும் மற்றும் 1.93 லட்சம் மீனவர் குடும்பங்கள் பயனடைய ரூ.135 கோடியம் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்புக்கு ரூ.12 கோடி வழங்கப்படும் என கூறினார்
16
பூந்தமல்லி - போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டின் போது அறிவித்துள்ளார். சென்னைக்கு 1,000 புதிய AC மின்சாரப் பேருந்துகள் வாங்க மற்றும் பணிமனை கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.29,863 கோடி நிதி ஒதுக்கப்படும். அதே போல ஹஜ் மானியம் ரூ.25,000-த்தில் இருந்து ரூ.35,000-ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. போதை இல்லா தமிழகத்தை உருவாக்க ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2,500 ஹெக்டரில் அலையாத்தி காடுகளை உருவாக்க ரூ.40 கோடி, , உள்துறை & மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
17
ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் உணவு மற்றும் கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தவும் தமிழ்நாட்டின் உணவுச் சுற்றுலா வழித்தடங்கள் அறிமுகம் படுத்தும் வகையில் உணவு மற்றும் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என கூறினார்
18
தமிழக பட்ஜெட்டில் சூப்பர் எல் நினோவால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.340 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
19
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பத் துறை, டிஜிட்டல் சேவை துறைக்கு ரூ.398 கோடியில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்படும் என கூறினார்
20
கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 'வெற்றி 150' அறிமுகம் செய்யப்படும்.125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை கிடைக்கும்.
