News
முதலமைச்சர் விஜய் அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் திறந்து வைத்தார்.
Published : Aug 04, 2026 06:09:18 PM - a month ago
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் (4.8.2026) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 525.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் 1.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
