News
உதயநிதி கைது குறித்துகட்சியின் மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published : Aug 04, 2026 12:49:36 PM - a month ago
உதயநிதி கைது குறித்துகட்சியின் மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
உதயநிதி கைது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் 1-க்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். இந்த கைதுக்கு எதிராக தி.மு.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மூத்த தலைவர்களுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்.
