பாடகி ஜமுனா ராணி, காலமானார் இசைவானில் ஜொலித்த செந்தமிழ்த் தேன்மொழியாள் நிலவினில் முதல் நான் சிரித்தால் தீபாவளி வரை. பல பாடல்கள். பாடியுள்ளார்
Published : Jul 31, 2026 04:01:17 PM - 3 months ago
கண்ணீர் அஞ்சலி: பெங்களுரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜமுனா ராணி, வயது மூப்பு காரணமாகப் நேற்று உயிரிழந்தார். ஜமுனா ராணியின் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இவரது மறைவிற்குத் திரை பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான இசை ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில். ஜமுனா ராணி ரசிகர்களை கவர்ந்தவர் யாரடி நீ மோகினி போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடி, தன் காந்தக் குரலால் தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைக் கட்டிப்போட்ட பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி, வயது மூப்பு காரணமாகப் பெங்களூரில் உயிரிழந்தார் . இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் இசையில் பல பிளாக்பஸ்டர் பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் 'மாலையிட்ட மங்கை' படத்தில் இவர் பாடிய 'செந்தமிழ்த் தேன்மொழியாள்' பாடல், இவரது அழுத்தமான தமிழ் உச்சரிப்பிற்காகவே இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏராளமான பாடல்கள்: அதோடுமட்டுமில்லாமல் தாரா தாரா வந்தாரா, காளை வயசு கட்டான சைசு, பாட்டொன்று கேட்டேன் என மெல்லிசைப் பாடல்களில் மயக்கிய இவர், ஜி.ராமநாதன் இசையில் உத்தம புத்திரன் படத்தில் டி.எம்.எஸ் மற்றும் ஜிக்கியுடன் இணைந்து பாடிய யாரடி நீ மோகினி பாடலில் அதிரடி காட்டியிருப்பார். அதுமட்டுமின்றி, இளையராஜாவின் இசையில் கமல்ஹாசனின் நாயகன் படத்தில் வரும் 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றியதும் இவர்தான். பாடகி ஜமுனா ராணி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வரதராஜுலு - திரௌபதி தம்பதியினருக்கு 1938 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் ஜமுனா ராணி. இவரது தாயார் திரௌபதி சிறந்த வீணை இசைக் கலைஞராவார். முழுக்க பெண்களை மட்டுமே கொண்ட வாத்தியக் குழுவை நடத்தி வந்த தன் தாயாரின் வழிகாட்டலில், 7 வயதிலேயே பாடும் வாய்ப்பைப் பெற்றார் ஜமுனா ராணி. சித்தூர் நாகய்யாவின் 'தியாகய்யா' தெலுங்குப் படத்தில் அறிமுகமான இவர், தமிழில் கல்யாணி படத்தில் 'சக்ஸஸ் சக்ஸஸ், ஒன் டூ த்ரீ' பாடல் மூலம் பின்னணிப் பாடகியாகியாக மாறினார்.
