News
சென்னை எழும்பூர் சில ரயில் சேவையில் மாற்றம்
Published : Jul 31, 2026 10:41:40 AM - 3 months ago
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 20 வரை 9 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்..
தஞ்சாவூர் - எழும்பூர், மங்களூர் -எழும்பூர், கொல்லம் - எழும்பூர், சேலம் எழும்பூர் ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையம் வரையிலும், திருச்சி - எழும்பூர் ராக்போர்ட் ரயில் மாம்பலம் ரயில் நிலையம் வரையிலும் ஆகஸ்ட் 5 தேதி முதல் ஆகஸ்ட் 19 தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு..
மறு மார்க்கத்தில் எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில், எழும்பூர் -மங்களூரு விரைவு ரயில், எழும்பூர்-கேரள மாநிலம் கொல்லம் அனந்தபுரி, எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 20 தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு..
